Copyright © 2006-2012 Recharge Now Online Shop Pvt Limited

"நீங்கள் சுயமாக டிடிஹச் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா,ரீசார்ஜ் செய்வது உங்களின் கைகளில்,எவ்வித பதிவு கட்டணமின்றி டீலர் ஐடியை எம்மிடம் பெற்று நீங்கள் ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ரீசார்ஜ் செய்து நீங்களும் லாபம் அடையலாம்.தொடர்புகளுக்கு:0773300211""Do you need online Recharge All Accounts like Ctn Rbuzz,Sundirect Reseller Buzz,DishTV FOS,Videocon D2H PCS contact me for details,Call:0773300211"

WE ARE SRILANKA'S PREMIER ONLINE AND OFFLINE DTH RECHARGE SERVICE PROVIDER & DISTRIBUTER""RECHARGE NOW DTH SYSTEMS"NO.33/2,VYRAVAR KOVIL RD,VYRAVARPULIYANKULAM,VAVUNIYA,SRILANKA.

Sunday 12 August 2012

பேஸ் புக் ஊடாக அவதூறு ஏற்படுத்தினால் வழக்கு?

பேஸ் புக் சமூக வலையமைப்பு ஊடாக அவதூறு ஏற்படுத்தினால் வழக்குத் தொடர்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மற்றும் இணைய தளங்களின் ஊடாக தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு அவதூறு பிரசாரங்கள் தொடர்பில், அமைச்சிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.


இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.


தொழில்நுட்ப அபிவிருத்தி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளினால் முழு உலகமுமே பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சுறு ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.


எனினும், பேஸ் புக் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை.


எனவே விரைவில் இவ்வாறு பேஸ் புக் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை தடுக்கவும் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More