Copyright © 2006-2012 Recharge Now Online Shop Pvt Limited

"நீங்கள் சுயமாக டிடிஹச் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா,ரீசார்ஜ் செய்வது உங்களின் கைகளில்,எவ்வித பதிவு கட்டணமின்றி டீலர் ஐடியை எம்மிடம் பெற்று நீங்கள் ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ரீசார்ஜ் செய்து நீங்களும் லாபம் அடையலாம்.தொடர்புகளுக்கு:0773300211""Do you need online Recharge All Accounts like Ctn Rbuzz,Sundirect Reseller Buzz,DishTV FOS,Videocon D2H PCS contact me for details,Call:0773300211"

WE ARE SRILANKA'S PREMIER ONLINE AND OFFLINE DTH RECHARGE SERVICE PROVIDER & DISTRIBUTER""RECHARGE NOW DTH SYSTEMS"NO.33/2,VYRAVAR KOVIL RD,VYRAVARPULIYANKULAM,VAVUNIYA,SRILANKA.

Tuesday 15 April 2014

7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்: நாளை கோலாகல துவக்கம்

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட்டின் 7வது சீசன் கோலாகலமாக நாளை துவங்குகிறது. உலக அளவில் கிரிக்கெட் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியதில் ஐபிஎல்லின் பங்கு அதிகம். 2008 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதத்தில் கோடை கொண்டாட்டமாக ஐபிஎல் சீசன் விருந்து படைத்து வருகிறது. 2014ம் ஆண்டின் ஐபிஎல் 7வது சீசன் நாளை ஆரம்பமாகிறது. இந்தியாவில் தேர்தல் நடப்பதால் இரண்டு கட்டமாக போட்டிகள் நடக்கின்றன. அதாவது முதல் கட்ட போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் நடக்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பி யன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர் கொள்கிறது.

முதல் 20 ஆட்டங்கள் இந்த நாடுகளில் நடக்கிறது. 2வது கட்டமாக 21வது ஆட்டத்தில் இருந்து இறுதி ஆட்டம் வரை இந்தியாவில் நடக்கின்றன. மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி மும்பையில் இறுதி ஆட்டம் நடக்கிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஜூன் 1ம் தேதி மும்பையில் சாம்பியன் பட்டத்துக்கு மல்லுக்கட்டும்.இந்த தொடரைப் பொறுத்தவரை டெல்லி அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் சதீஸ்வர் புஜாரா, பெங்களூர் அணியின் யுவராஜ் சிங் (இந்த தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்), டெல்லி வீரர் தினேஷ் கார்த்திக் (இவர் அதிக தொகைக்கு ஏலம் போன 2வது வீரர்), கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் ஆகியோர் உள்ளனர். இதில்லாமல் அதிரடிக்கு கோரி ஆண்டர்சன், மேக்ஸ்வெல், டூபிளஸ்சிஸ், டேரன் சம்மி, கெயில், டேவன் ஸ்மித், டோனி, ரெய்னா, மெக்குல்லம், டிவில்லியர்ஸ், கோஹ்லி, சே வாக் என மற்றொரு படை பேட்டிங்கில் விருந்து படை க்க தயாராக உள்ளது.

இதே போல் சுழல் பவுலிங்கில் நரேன், அஸ்வின், மெண்டிஸ் ஆகியோரும் மிரட்டுவர். ஐபிஎல் சூதாட்டம் கடந்த ஆண்டு பரபர ப்பை ஏற்படுத்தி தொடரை பஞ்சர் ஆக்கினாலும், பல நாட்டு வீரர்கள் ஒரே அணியில் சேர்ந்து விளை யாடுவது கிரிக்கெட் ரசிகர் களுக்கு வரப்பிரசாதமான ஒன்றே. விமர்சனங்கள் விசனப்பட வைத்தாலும், நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர் களுக்கு தினமும் இரவு விருந்துதான் என்பதில் சந்தேகம் இல்லை.நாளை முதல் போட்டி யில் களமிறங்கும் மும்பை, கொல்கத்தாஅணிகள் குறித்து ஒரு பார்வை:நடப்பு சாம்பியனான மும்பை அணி, இந்த முறை ரோஹித் சர்மா தலை மையில் களமிறங்குகிறது.

அணியில் மைக்கேல் ஹஸ்ஸி, ராயுடு, ரோஹித், பொல்லார்டு, கோரே ஆண்டர்சன் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டுவர். பந்து வீச்சில் டுவெண்டி 20 உலக கோப்பையில் கலக்கிய மலிங்கா, ஜாகீர் கான், பிரக்யான் ஓஜா,  ஹர்பஜன் சிங் ஆகியோர் பவுலிங்கில் அசத்துவர்.இதேபோல் கொல்கத்தா அணி கேப் டன் காம்பீர் தலைமையில் களமிறங்கு கிறது. அதிரடிக்கு உத்தப்பா, கேப்டன் காம்பீர், காலிஸ், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹசன் உள்ளனர். பந்து வீச்சில் மந்திர பவுலர் சுனில் நரேன், வினய் குமார், பியூஸ் சாவ்லா, மோர்னே மார்கல், உமேஷ் யாதவ் உள்ளனர். முதல் போட்டியில் முத்திரை பதிப்பது யார்? என்று நாளை தெரிந்து விடும். அபுதாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More