சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்தை
அறிமுகப்படுத்தியது. இதன்படி தென்னாபிரிக்காவில் நடந்த முதலாவது ஐ.சி.சி.
20 ஓவர் உலக கிண்ணத்தை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
2009ம் ஆண்டு பாகிஸ்தானும், 2010ம் ஆண்டு இங்கிலாந்தும், 2012ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும் கிண்ணத்தை வசப்படுத்தின.
இலங்கை அணி இருமுறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றபோதும் (2009, 2012) கிண்ணத்தை தக்கவைக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
இந்தநிலையில் 5வது 20க்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷில் இன்று ஆரம்பமாகின்றன. ஏப்ரல் 6 வரை இந்த போட்டி நடைபெறவுள்ளன.
இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக முதன்மை சுற்றில் விளையாடும்.
மற்ற 8 அணிகள் தகுதி சுற்றில் விளையாடும். இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், நேபாளம் ஆகிய அணிகளும் பி பிரிவில் சிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும்.
முதன்மை சுற்றில் விளையாடும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்..
முதல் பிரிவில் – தென்னாபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தகுதி சுற்றில் வெல்லும் அணி (பி பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி).
இரண்டாவது பிரிவில் – இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி (ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி)
ஒவ்வொரு அணியிலும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
நாளை முதல் 21ம் திகதி வரை தகுதி சுற்று நடைபெறும். பின்னர் முதன்மை சுற்றும் தொடங்குகிறது. ஏப்ரல் 1ம் திகதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது.
3 மற்றும் 4ம் திகதி அரை இறுதியும், ஏப்ரல் 6ம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ள இலங்கை அணி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் போட்டிகளில் களமிறங்கவுள்ளது.
இலங்கை அணி இந்தத் தொடரை வெற்றி கொண்டால் விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.