Copyright © 2006-2012 Recharge Now Online Shop Pvt Limited

"நீங்கள் சுயமாக டிடிஹச் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா,ரீசார்ஜ் செய்வது உங்களின் கைகளில்,எவ்வித பதிவு கட்டணமின்றி டீலர் ஐடியை எம்மிடம் பெற்று நீங்கள் ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ரீசார்ஜ் செய்து நீங்களும் லாபம் அடையலாம்.தொடர்புகளுக்கு:0773300211""Do you need online Recharge All Accounts like Ctn Rbuzz,Sundirect Reseller Buzz,DishTV FOS,Videocon D2H PCS contact me for details,Call:0773300211"

WE ARE SRILANKA'S PREMIER ONLINE AND OFFLINE DTH RECHARGE SERVICE PROVIDER & DISTRIBUTER""RECHARGE NOW DTH SYSTEMS"NO.33/2,VYRAVAR KOVIL RD,VYRAVARPULIYANKULAM,VAVUNIYA,SRILANKA.

Saturday, 27 October 2012

விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.


விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 Indian Rs செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:
  • விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .
  • இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 
  • ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More